இனி வாட்சப் இல்லாதவர்களுடனும் உரையாட முடியும் - வருகிறது விருந்தினர் அரட்டை வசதி
6 ஆவணி 2025 புதன் 14:04 | பார்வைகள் : 1195
வாட்சப் செயலி இல்லாதவர்களுடனும் உரையாடும் வகையில் புதிய அம்சம் நடைமுறைக்கு வர உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் வாட்சப் செயலி பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிதாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதே போல், தற்போது வாட்சப் செயலி பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் விருந்தினர் அரட்டை(Guest Chat) என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சத்தில், வாட்சப் செயலியை பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி அழைப்பு விடுக்க முடியும்.
இந்த லிங்க்கை, SMS ஈமெயில் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் அனுப்ப முடியும்.
இந்த லிங்கை கிளிக் செய்தால், பிரௌசரில் தற்காலிக பக்கம் ஒன்று திறக்கும். அதில் வாட்சப் செயலியை டவுன்லோட் செய்யாமலே உரையாட முடியும்.
ஆனால், இதில் புகைப்படம், வீடியோ, குரல்பதிவு உள்ளிட்ட எந்த கோப்புகளையும் அனுப்ப முடியாது. மேலும், குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.
இந்த உரையாடல் end-to-end encryption செய்யப்பட்டுள்ளதால், இதனை வேறு யாரும் அணுக முடியாது.
தற்போது இந்த அம்சம் உருவாக்கத்தில் உள்ள நிலையில், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan