Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா நோய் பாதிப்புகள்!

சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா நோய் பாதிப்புகள்!

6 ஆவணி 2025 புதன் 17:09 | பார்வைகள் : 166


சீனாவில் சிக்குன்குனியா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சில பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் ஜூலையில் இருந்து 7000 க்கும் மேற்பட்ட சிக்குன்குனியா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதையடுத்து சீன சுகாதார நிர்வாகம் கோவிட் தொற்று பரவலுக்கு நிகரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

சிக்குன்குனியா வைரஸ் பாதிப்பானது குவாங்டாங் மாகாணத்தின் ஃபோஷன் நகரில் அதிகமாக பதிவாகியுள்ளது.

 

ஃபோஷன் நகரில் பாதிக்கப்பட்டவர்களின் படுக்கைகள் கொசுவலை கொண்டு முற்றிலுமாக மூடப்பட்டதுடன், பரிசோதனையில் எதிர்மறை முடிவுகள் வரை அல்லது, தனிப்படுத்தப்பட்ட பல வராங்களுக்கு பிறகே மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

சிக்குன்குனியா சீனாவில் வழக்கமானது இல்லை என்றாலும், தெற்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வழக்கமான பாதிப்பாக பார்க்கப்படுகிறது.

 

சிக்குன்குனியா நோயானது Aedes aegypti மற்றும் Aedes albopictus போன்ற சிக்குன்குனியா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் கொசுக்களிடம் இருந்து பரவுகிறது.

 

இந்த வகையான கொசுக்கள் டெங்கு மற்றும் ஜிகா போன்ற வைரஸ்களையும் பரப்புகிறது.

 

நோய் அறிகுறிகள்: வைரஸால் பாதிக்கப்பட்ட கொசு கடித்த 3 முதல் 7 நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவருக்கு சிக்குன்குனியா பாதிப்புகள் தென்பட தொடங்கும்.

 

அதன்படி, காய்ச்சல், தலைவலி, குமட்டல், தோல் எரிச்சல், மூட்டுகளில் வலி ஆகியவை பொதுவான அறிகுறிகளாக காணப்படும்.

 

இந்த வைரஸ் பாதிப்பு ஒருவார காலத்திற்குள் குணமடையும் என்றாலும், சிலருக்கு வருட கணக்கில் மூட்டு வலி பாதிப்பு இருக்கலாம்.

 

சிக்குன்குனியா வைரஸ் தொற்றுக்கு தனிப்பட்ட சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (CDC) மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

சீனாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக தென் கிழக்கு சீனாவின் சில பகுதிகளுக்கு CDC பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

பொதுவாக, சிக்குன்குனியா வைரஸால் பாதிக்கப்பட்ட கொசு ஒருவரை கடித்து விட்டு மற்றொரு நபரை கடிக்கும் போது இந்த வைரஸ் தொற்றானது பரவுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்