இந்தியா மீது வரி 50 சதவீதமாகிறது: டிரம்ப் தொடர்ந்து அடாவடி

7 ஆவணி 2025 வியாழன் 04:55 | பார்வைகள் : 178
விதித்த கெடு நிறைவடைவதற்குள், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் வரை 25 சதவீதமாக இருந்த வரி, இனி 50 சதவீதமாக இருக்கும் என்று டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
ரஷ்ய கூட்டமைப்பால் அமெரிக்கா சந்திக்கும் மிரட்டல்களுக்கான தீர்வு என்ற பெயரிலான உத்தரவில் டிரம்ப் நேற்றிரவு கையெழுத்திட்டார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அதில்
தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரி இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக அவர் விதித்துள்ள 25 சதவீத வரி, 21 நாட்களில், அதாவது வரும் 27ல் அமலுக்கு வரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தெரிய வந்துஉள்ளது என்றும், அதனால் அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பும் பொருட்களுக்கு கூடுதல் வரி 25 சதவீதம் பொருந்தும் என்றும் தன் உத்தரவில் டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் அதிக இறக்குமதி வரி விதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில், பிரேசில், இந்தியா அதிகபட்சமாக 50 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.
மியான்மர் 40, தாய்லாந்து, கம்போடியா தலா 36, வங்கதேசம் 35, இந்தோனேஷியா 32, இலங்கை, சீனா தலா 30 சதவீதம் வரி விதிப்பை சந்திக்கின்றன.
அமெரிக்கா, இந்தியா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, ஆறாம் கட்ட பேச்சு நடத்த, வரும் 25ம் தேதி அமெரிக்க குழு இந்தியா வரவுள்ள நிலையில், கூடுதல் வரி விதிப்பான 25 சதவீதம் 27 ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கும் துறைகள்
* ஜவுளி, ஆயத்த ஆடை
* ரத்தினங்கள், நகைகள்
* இறால்
* தோல், காலணிகள்
* விலங்கு பொருட்கள்
* ரசாயனங்கள்
* மின்னணு, இயந்திர உபகரணங்கள்
விலக்கு பெற்றவை
* மருந்து பொருட்கள்
* கச்சா எண்ணெய்
* சுத்திகரிக்கப்பட்டஎரிபொருள்
* இயற்கை எரிவாயு
* நிலக்கரி, மின்சாரம்
* கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன்
அநியாயம்:
இந்தியா கண்டனம்: 'இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்தது நியாயமற்றது, நியாயப்படுத்த முடியாதது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்கு பதிலளித்து, நம் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை:அமெரிக்க அரசின் நடவடிக்கை நியாயமற்றது; இந்தியா தனது தேச நலனைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நியாயப்படுத்த இயலாத, காரணமற்ற நடவடிக்கை என அமெரிக்காவின் செயலை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
சந்தை விலை நிலவரத்தைப் பொருத்து, சர்வதேச வர்த்தக விதிகளின் கீழ் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, அண்மைக் காலமாக அமெரிக்கா குறிவைத்துள்ளது.
இது தொடர்பாக, ஏற்கனவே இந்தியா பலமுறை தன் நிலையை, நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், சந்தைப் போட்டி அடிப்படையிலான விலையில் தேச நலன் கருதியே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா கண்டனம்
அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்கு பதிலளித்து, நம் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை:அமெரிக்க அரசின் நடவடிக்கை நியாயமற்றது; இந்தியா தன் தேச நலனைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நியாயப்படுத்த இயலாத, காரணமற்ற நடவடிக்கை என அமெரிக்காவின் செயலை மீண்டும் உறுதிப்
படுத்துகிறோம்.
சந்தை விலை நிலவரத்தைப் பொருத்து, சர்வதேச வர்த்தக விதிகளின் கீழ் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, அண்மைக் காலமாக அமெரிக்கா குறிவைத்துள்ளது.
நாட்டு மக்களின் எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025