அல்ஜீரியாவுடன் உறவு முறிகிறது! - ஒப்பந்தம் நீக்கம் - மக்ரோன் சீற்றம்!!

7 ஆவணி 2025 வியாழன் 06:00 | பார்வைகள் : 1044
அல்ஜீரியாவுடனான இராஜதந்திர உறவு முடிவுக்கு வருகிறது எனவும், மிகவும் இறுக்கமான நடவடிக்கைகள் அல்ஜீரியா மீது திணிக்கப்படும் எனவும், 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்தார்.
அல்ஜீரியா விடயத்தில் பிரான்ஸ் இன்னும் உறுதியுடன் இருக்கவேண்டும் எனவும், அதற்கு மரியாதையை கற்றுத்தரவேண்டும் எனவும் மக்ரோன் பொரிந்து தள்ளியுள்ளார்.'இராஜதந்திர மற்றும் அதிகாரபூர்வ விசா விலக்குகள்' கொண்ட 2013 ஆம் ஆண்டு அல்ஜீரியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை நீக்கவேண்டும் என பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
பிரெஞ்சு குடியுரிமை கொண்ட எழுத்தாளர் , ஊடகவியலாளர் Boualem Sansal மற்றும் Christophe Gleizes ஆகிய இருவரும் அல்ஜீரியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறது. அல்ஜீரியா பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை. எனவே அதன்மீது இறுக்கமான முடிவுகளை எடுக்க பிரான்ஸ் தயாராகிறது என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025