Paristamil Navigation Paristamil advert login

புடினை நேருக்கு நேர் சந்திக்கவிருக்கும் ட்ரம்ப் - ஜெலென்ஸ்கியும் பங்கேற்க வாய்ப்பு

புடினை நேருக்கு நேர் சந்திக்கவிருக்கும் ட்ரம்ப் - ஜெலென்ஸ்கியும் பங்கேற்க வாய்ப்பு

7 ஆவணி 2025 வியாழன் 09:38 | பார்வைகள் : 281


உக்ரைன் விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்கவிருக்கும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதியும் இந்த சந்திப்பில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

உக்ரைன் போர் குறித்து ஐரோப்பிய தலைவர்களிடம் புதன்கிழமை தொலைபேசியில் உரையாடிய ட்ரம்ப், தமது திட்டம் குறித்து விவாதித்துள்ளார்.

மட்டுமின்றி, ட்ரம்பின் சிறப்பு தூதர் Steve Witkoff மாஸ்கோவில் விளாடிமிர் புடினை நேரிடையாக சந்தித்து உரையாடிய நிலையிலேயே ட்ரம்பும் புடினை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், புடினும் ஜெலென்ஸ்கியும் இந்த அவசர சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டுள்ளனரா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவிக்கையில்,

ரஷ்ய நிர்வாகம் ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் ஜனாதிபதி புடின் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரையும் சந்திக்க ஜனாதிபதி ட்ரம்ப் தயாராக உள்ளார் என்றே லீவிட் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக தேர்தல் பரப்புரையின் போது உறுதி அளித்திருந்த ட்ரம்ப், அதை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

சமீப மாதங்களில் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா உக்கிரத் தாக்குதலை முன்னெடுத்து வருவது புடின் மீது வெறுப்பை வெளிப்படுத்த வைத்தது. 

மட்டுமின்றி, ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததன் பின்னரே, ரஷ்யாவும் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

மறுபக்கம் உக்ரைனுக்கு கடும் நெருக்கடிகளையும் ட்ரம்ப் அளித்து வந்தார்.

ஒருகட்டத்தில், புடினுக்கு 50 நாட்கள் கெடு விதித்ததுடன், போரை முடிவுக்கு கொண்டுவர தவறினால் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.

அதில் பலனில்லை என்பதை உணர்ந்த ட்ரம்ப், கடந்த மாதம் ஸ்கொட்லாந்தில் வைத்து, 10 நாட்கள் கெடு என அறிவித்தார். 

தற்போது அடுத்த வாரம் தாமே நேரிடையாக புடினை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்