காட்டுத்தீ நிலவரம் - தீ பரவல் குறைந்துள்ளது என மாவட்டஆணையம் உறுதிப்படுத்துகிறது!

7 ஆவணி 2025 வியாழன் 09:18 | பார்வைகள் : 1963
Aude மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடரும் பெரும் காட்டுத்தீயின் நடவடிக்கைகள் குறித்த புதுப் பட்டியலை இன்றைய காலை வெளியிட்ட மாவட்டஆணையம் (préfecture), தீ பரவல் மெதுவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தீ பரவல் தற்போது 16,000 ஹெக்டேர்களில் நிலைத்துள்ளது
15 மாவட்டப் பகுதிகள் தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளன
இரவு நேரத்தில் காற்று இல்லாமை மற்றும் வெப்பநிலை குறைவு போன்ற வானிலை நன்மைகள்,
மற்றும் முற்றுகை போன்ற மீட்பு பணிகளின் சிறப்பான செயல்திறன் காரணமாக, தீ பரவல் மிகக் குறைந்துள்ளது
2,100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் , 500 வாகனங்கள் தீயணைப்புப் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.
காவற்துறையினர் மற்றும் இராணுவம் துணைபுரிந்து பணியாற்றுகின்றனர்
“தீ பரவல் வேகம் குறைந்துள்ளது. நள்ளிரவில் வெப்பநிலை குறைவதும், காற்று இல்லாமையும், மீட்புப் படையினர் சிறப்பாக செயல்பட்டதும் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாகும்.” என மாவட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
Aude பகுதியில் பரவும் காட்டுத்தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் வரத் தொடங்கி உள்ளது.. பாதிக்கப்பட்ட நிலப்பரப்பும், மக்களும் குறிப்பிடத்தக்கவாறு அதிகமாக இருந்தாலும், தீயணைப்பு குழுக்கள், காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர். வானிலை நன்மைகள் இந்த நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துகின்றன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025