தெருவில் 58 வயதுடைய பெண்ணின் உடலம் கண்டுபிடிப்பு – பாலியல் வன்முறை மற்றும் கொலை!

7 ஆவணி 2025 வியாழன் 11:20 | பார்வைகள் : 4478
2025 ஜூலை 30, புதன்கிழமை காலை, Tarbes (Hautes-Pyrénées) நகரில் உள்ள ஒரு தெருவில், 58 வயதுடைய பெண்ணொருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமையினால் இதய மற்றும் சுவாசநிறுத்தம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

சுமார் காலை 6:15 மணியளவில், பொதுமக்கள் அந்த பெண்ணின் உடலை தெருவில் கண்டபோது, அவர் ஏற்கனவே சாவடைந்திருந்தார். தார்ப் நீதிமன்றம், தகவலை உறுதிப்படுத்தி, இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
சம்பவத்திற்கு உடனே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணை டூலூசில் உள்ள மாவட்டங்களிற்னு இடையிலான் குற்றவியல் காவற்துறையான SIPJ (Service interdépartemental de police judiciaire)) யிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை தற்போது 'பாலியல் வன்முறை மற்றும் கொலை' எனும் குற்றங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.
உடற்கூற்று மருத்துவ ஆய்வு (autopsie) பெண்ணின் உடலில் பல அடையாளங்கள் கண்டறிந்தது:
பாலியல் வன்முறை செய்யபட்டதற்கான சாட்சிகள்
மூளைப் பகுதி மற்றும் முதுகெலும்புகளில் முறிவுகள்
முதுகும் தொடையிலும் பெரும் காயங்கள், கல்லீரல் பகுதியில் குச்சி அடித்த மாதிரியான கண்டல்கள்
கண்டறியப்பட்டுள்ளன.
தொடக்கத்தில், சம்பவம் குறித்து தற்கொலை எனும் எண்ணம் முன்வைக்கப்பட்டது. ஏனெனில், பெண்ணின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் மனவேதனையுடன் போராடிய ஒருவர் என்ற பாதிப்புகள் இருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஆனால் அது கொலை என நிரூபணம் ஆகி உள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் பிரான்சில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மீண்டும் எழுப்புகிறது. விவரமான விசாரணை தற்போது முன்னெடுக்கப்படுகிறது, மேலும் வெளிப்படையான தகவல்களுக்காக அதிகாரப்பூர்வ முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.