அதிவேக இணையம்! - உலக பட்டியலில் Lyon நகரம் முதலிடம்!!

7 ஆவணி 2025 வியாழன் 11:06 | பார்வைகள் : 418
கம்பி ஊடாக வழங்கப்படும் இணைய தொடர்பில் (débit internet filaire est le plus rapide) உலகில் அதிகவேகத்தில் இணையம் வழங்கும் நகரங்களில் பிரான்சின் லியோன் நகரம் உள்ளது. தலைநகர் பரிஸ் 23 ஆவது இடத்தில் உள்ளது.
இணையத்தள வேகத்தினை கணக்கிடும் Speedtest நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் லியோன் நகரம் 347.52 Mb/s. (ஒரு நொடிக்கு 347.52 மெகாபைட் இணைய வேகம்) வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் இதுவே அதிகபட்ச கம்பி வழி இணைய வேகமாகும்.
அதன் பின்னால், அமீரகத்தின் அபுதாபி (Abu Dhabi) நகரம் 344.34 Mb/s வேகத்துடனும், Chili தலைநகரான Valparaiso, 330.57 Mb/s வேகத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
சீனாவின் பீஜிங் (Beijing) 303.44 Mb/s வேகத்துடன் நான்காவது இடத்திலும், அதே சீனாவின் ஷங்காய் (Shanghai) நகரம் 303.15 Mb/s வேகத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025