பெண்கள் ப்ரா அணிவதை நிறுத்தும்போது உடலில் என்ன நடக்கும் தெரியுமா..?
18 ஆவணி 2021 புதன் 13:25 | பார்வைகள் : 9008
நேசிப்போ... வெறுப்போ... எல்லா பெண்களும் ப்ராவுடன் ஒரு உறவைப் பகிரத்தான் செய்கின்றனர். சரியான அளவிலான ஒரு ப்ரா உங்களுக்கு பொருத்தம் மற்றும் வடிவத்தை வழங்க முடியும் என்றாலும், பெரும்பாலான நாட்களில் நீங்கள் அணியும் ப்ரா உங்களை பாடாய் படுத்திவிடும். இந்த அனுபவம் பெரும்பாலான பெண்களுக்கும் நேர்ந்திருக்கும். ப்ரா என்பது பெண்களின் மார்பக வடிவம் மற்றும் அளவுக்கு உதவுவது மட்டுமல்ல, பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் முதுகுவலியை நிர்வகிக்கவும் உதவுகிறது.
ப்ரா அணியாமல் இருப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமும் முடிவும் என்றாலும், நீண்ட காலத்திற்கு ப்ரா அணிவதை நிறுத்தும்போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்:
நீங்கள் ப்ரா அணிவதை நிறுத்தியவுடன், பட்டைகளால் சிவந்த உங்கள் சருமம் மெல்ல சரியாகும். நீண்ட நேரம் ப்ரா அணியும் பழக்கம் இருந்தால் இது வழக்கமான நிகழ்வாக இருக்கலாம். ப்ரா அணியாதது சருமம் மற்றும் மார்பகங்களை சுற்றியுள்ள திசுக்களை விடுவிக்கிறது.
ரிலாக்ஸ் ஆவீர்கள்!
ப்ரா அணியாமல் இருப்பது சிறந்த உடல் தளர்வுக்கு உதவுகிறது. அறிவியல் பூர்வமாக, அதிகப்படியான பேடட் ஃபேப்ரிக் ப்ராக்களை அணியாமல் இருப்பது மார்பகங்கள் தங்களை தாங்களே இயற்கையாக மாற்றியமைக்க கற்றுக்கொள்கின்றன. அது இயற்கையான வளர்ச்சியும் கூட.
இரத்த ஓட்டம் சீராகும்:
எளிமையாகச் சொன்னால், ப்ரா அணிவதை நீங்கள் நிறுத்திவிட்டால் உங்கள் சருமம் மற்றும் திசுக்கள் வழியாக இரத்த ஓட்டம் மார்பு பகுதியைச் சுற்றி மேம்படுகிறது. இது குறிப்பாக உங்கள் சருமத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் ப்ரா இறுக்கமாக இருப்பதால், நீங்கள் தோல் அழுத்தத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வலியைக் குறைக்கும்:
ப்ரா அணிவதை நிறுத்திவிட்டீர்கள் என்றால், மார்பு தசைகள் மற்றும் முதுகில் வலி ஏற்படுவது குறையும். இது பெரும்பாலும் நீங்கள் அணியும் ப்ரா வகையைப் பொறுத்தது. ப்ராக்கள் விலா எலும்பு, முதுகு தசைகள் அல்லது கழுத்தில் கூட அழுத்தத்தைத் தூண்டும். எனவே, இப்படியான வாழ்க்கை முறை இந்த சிக்கலை தீர்க்க உதவும். மாறாக, பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு, ப்ராக்கள் வலியைக் குறைக்க உதவுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.