சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் ஷங்கரின் மகன்..

7 ஆவணி 2025 வியாழன் 16:46 | பார்வைகள் : 2535
இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட படங்களுக்கு பெயர் போனவர். ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழில் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கடந்த சில வருடங்களாக ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநர் ஆக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குநர் சிவா என்பவர் இயக்குகிறார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.