காசாவில் தொடரும் தாக்குதல் - பட்டினியால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்

7 ஆவணி 2025 வியாழன் 18:26 | பார்வைகள் : 187
காசாவில் பட்டினியால் மரணித்தோரின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பட்டினியால் மரணித்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், காசா முழுவதும் நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 771 பேர் காயமடைந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார்.
எனினும், நெத்தன்யாகுவின் இந்த நடவடிக்கை கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை சுமார் 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்து 51,442 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025