பரிஸ் நீச்சல்குளத்தில் குளோரினுக்கு பதிலாக அமிலம் கலந்ததால் விஷ வாயுக்கசிவு!!!

7 ஆவணி 2025 வியாழன் 18:40 | பார்வைகள் : 509
பரிஸில் உள்ள நான்கு நட்சத்திர ஹோட்டலில், ஒரு ஊழியர் தவறுதலாக குளோரினுக்கு பதிலாக அமிலத்தை நீச்சல்குளத்தில் ஊற்றியதால், விஷ வாயு வெளியேறியுள்ளது.
இந்த தவறு ஒரு பேரழிவாக மாறியிருக்கக்கூடியது. ஆகஸ்ட் 6ஆம் திகதி புதன்கிழமை, பிற்பகல் 4 மணிக்கு முன்பாக, பரிஸின் 10வது வட்டாரத்தில் உள்ள Château-Landon வீதியில் அமைந்துள்ள Bloom House என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலில் உள்ள தனியார் நீச்சல் குளத்திலிருந்து விஷ வாயு வெளியேறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, மீட்பு குழுக்கள் அங்கு விரைந்தனர்.
இந்த விஷ வாயுவால் ஊழியர் உட்பட மூன்று வாடிக்கையாளர்கள் மற்றும் இரண்டு தீயணைப்புப் படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சரும காயங்களுக்கு உள்ளாகியுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
வேதியியல் விபத்துக்குப் பின்னர், தீயணைப்பு படையினர் NRBC (நியூகிளியர், கதிரியக்கம், உயிரியல், வேதியியல்) நெறிமுறையை செயல்படுத்தி குளத்தை வெறிச்சோட செய்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன. சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது, மற்றும் ஹோட்டல் தற்போது இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025