Paristamil Navigation Paristamil advert login

சிகரெட் பற்றவைத்தவருக்கு - 15,000 யூரோக்கள் குற்றப்பணம்! - ஒருவருட சிறை!

சிகரெட் பற்றவைத்தவருக்கு - 15,000 யூரோக்கள் குற்றப்பணம்! - ஒருவருட சிறை!

8 ஆவணி 2025 வெள்ளி 06:00 | பார்வைகள் : 740


பிரெஞ்சு போரில் உயிர்நீத்த அடையாளம் தெரியாத வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள Soldat inconnu அணையா தீபத்தில் சிகரெட் பற்றவைத்த நபருக்கு 15,000 குற்றப்பணமும், ஒருவருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Arc de Triomphe இல் உள்ள அணையா தீபத்தைச் சுற்றி சுற்றுலாப்பயணிகள் பலர் சூழ்ந்திருக்க, நபர் ஒருவர் சுடரில் சிகரெட் ஒன்றை பற்றவைத்த காட்சிகள் காணொளியாக பரவி, பலரது கோபத்தை தூண்டியிருந்தது. அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூறி வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டு, ஓகஸ்ட் 7, நேற்று வியாழக்கிழமை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 15,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.


குறித்த அணையாச் சுடர், முதலாம் உலக யுத்தத்தில் மாண்ட பெயர் தெரியாத இராணுவ வீரர்களுக்காக 1920 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்