இந்தியாவுடன் 20 ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிக்கும்; அமெரிக்க செனட்டர்

8 ஆவணி 2025 வெள்ளி 15:04 | பார்வைகள் : 103
அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பினால், இந்தியா - அமெரிக்கா இடையே இத்தனை ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்ட வலுவான உறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்கா செனட்டர் (மேலவை உறுப்பினர்) க்ரிகோரி மீக்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வதை எதிர்த்து இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
இதன்மூலம், இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த செயல் நியாயமற்றது என்று அதிருப்தி குரல் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க செனட்டரும், மூத்த காங்கிரஸ் உறுப்பினருமான க்ரிகோரி மீக்ஸ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், டிரம்பின் இந்த வரி விதிப்பு பிடிவாதம் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 20 ஆண்டுகளாக கவனமாக கட்டமைக்கப்பட்ட வலுவான உறவைப் பாதிக்கும்.
இருநாடுகளுக்கு இடையே ஆழமான மூலோபாய, பொருளாதார உறவுகள் உள்ளன. எந்தக் கவலைகளையும் நமது ஜனநாயக மதிப்புகளுடன் பொருந்தும் வகையில், இரு தரப்புக்கும் மரியாதைக்குரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும், என்று கூறினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025