காஸா தொடர்பில் நெதன்யாகுவிற்கு ஜோர்தானிய அதிகாரிகள் பதிலடி

8 ஆவணி 2025 வெள்ளி 09:15 | பார்வைகள் : 1146
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவை அரபுப் படைகளிடம் ஒப்படைக்க விரும்புவதாகக் கூறியதை அடுத்து, அரேபியர்கள் பாலஸ்தீனியர்கள் ஒப்புக்கொண்டு முடிவெடுப்பதை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று ஜோர்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காஸாவில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு முறையான பாலஸ்தீன அமைப்புகள் மூலம் செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சி ஏற்பாடுகள் அல்லது எந்த அரபு நாடுகள் இதில் ஈடுபடலாம் என்பது குறித்து நெதன்யாகு விரிவாகக் கூறவில்லை.
காஸாவை மொத்தமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும், பின்னர் அரபுப் படைகளிடம் காஸாவை ஒப்படைக்க விரும்புவதாகவும் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்க மூத்த அமைச்சர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் நெதன்யாகு சந்திப்பையும் முன்னெடுத்தார்.
இந்த நிலையிலேயே, அரேபியர்கள் பாலாஸ்தீன் பக்கம் என்றும், அவர்கள் முடிவெடுப்பதை அரேபிய அரசுகள் அங்கீகரிக்கும் என்றும் ஜோர்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அரேபியர்கள் நெதன்யாகுவின் கொள்கைகளுக்கு உடன்படவோ அல்லது அவர் ஏற்படுத்தியுள்ள குழப்பத்தை சுத்தம் செய்யவோ மாட்டார்கள் என்றும் ஜோர்தான் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025