Paristamil Navigation Paristamil advert login

வேலையில்லாதோர் எண்ணிக்கையில் மாற்றமில்லை!

வேலையில்லாதோர் எண்ணிக்கையில் மாற்றமில்லை!

8 ஆவணி 2025 வெள்ளி 08:32 | பார்வைகள் : 406


 

கொடுப்பனவுகளை பெற்று வரும் வேலை தேடுவோருக்கான எண்ணிக்கையில் 2025 ஆம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்படவில்லை.

தொழிலாளர் அலுவலகம் (Bureau international du Travail) வெளியிட்ட தரவுகளின் படி, வேலைதேடுவோரின் எண்ணிக்கை 7.5% சதவீதமாக உள்ளது எனவும், இவ்வருடத்தின் முதல் காலாண்டிலும் கிட்டத்தட்ட இதே (7.4%) அளவே இருந்ததாகவும் இரண்டாவது காலாண்டில் அது சிறிதளவு அதிகரித்துள்ளது எதுவும் எனவும் BIT அறிவித்துள்ளது.


இரண்டாவது காலாண்டில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 29,000 பேரினால் அதிகரித்து 2.4 மில்லியனான உயர்வடைந்துள்ளது.

பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை இறுதியாக 1982 ஆம் ஆண்டு 7.1% சதவீதமாக பதிவாகியிருந்தது. அதன் பின்னர் எப்போதும் அதற்கு சமமாகவோ, அதை விட குறைவாகவோ பதிவாகவில்லை என INSEE நிறுவனம் தெரிவிக்கின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்