Aude பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் – முக்கிய தகவல்கள்!

8 ஆவணி 2025 வெள்ளி 10:22 | பார்வைகள் : 764
ஓகஸ்ட் 7 வியாழக்கிழமை மாலை, Aude பகுதியில் இரண்டு நாட்களுக்கு மேலாக எரிந்த பெரும் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், முழுமையாக அணைக்க இன்னும் பெரும் பணி இன்னமும் மிச்சமுள்ளது. என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும் அளவிலான சேதம்
17,000 ஹெக்டேர்களுக்கு மேற்பட்ட காடுகளும் தாவரங்களும். 48 மணி நேரத்திற்குள் எரிந்தன.
1 பேர் உயிரிழப்பு, 18 பேர் காயம் — இதில் 16 பேர் தீயணைப்புப் படையினர்.
36 வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிந்தன, 54 வாகனங்கள் எரிந்தன.
2,000 பேர் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர்.
50 ஆண்டுகளில் மிகப்பெரிய தீ விபத்து
அரசு தரவுத்தளத்தின் படி, 1973 முதல் பிரான்சின் மத்தியதரைக் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ இதுவாகும்.
பணியில் ஈடுபட்டவர்கள்:
2,000க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர்,
200க்கும் மேற்பட்ட ஜோந்தார்மினர்
பல வானூர்தி ஆதரவு பிரிவுகள் தொடர்ந்தும் பணியில்
தீ விபத்தின் ஆரம்பம்
ஆரம்ப விசாரணையின் படி, தீ ரிபோட் (Ribaute) அருகிலுள்ள சாலையோரத்தில் துவங்கியது.
கார்கசோன் (Carcassonne) நீதிமன்றம் இதன் துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.
பிரான்சில் 10 காட்டுத்தீகளில் 9 மனிதக் குற்றச் செயலினால் மட்டுமே ஏற்பட்டுள்ளன எனபது அதிர்ச்சிக்குள்ளான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.