ஓகஸ்ட் 8-9 இரவு - பூரண சந்திரன் - வானை ரசிக்க சிறந்த நேரம்!

8 ஆவணி 2025 வெள்ளி 13:22 | பார்வைகள் : 4862
இவ்வருடத்தின் கோடை பருவத்தில் வானத்தில் நட்சத்திரங்களும் கோள்களும் தெரியும் இரவுகள் பல உள்ளன. அவற்றில் ஓகஸ்ட் 8 முதல் 9 வரை இருக்கும் இரவு மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
முதலில், அந்த இரவு 'ESTURGEON' பூரண சந்திரன் வானில் பிரகாசிக்கும். இது ஓகஸ்ட் மாத பூரண சந்திரன் என்பதற்கான பாரம்பரிய அமெரிக்க இனப் பெயர். இந்த பெயர், அந்த மாதத்தில் ESTURGEON மீனகள் அதிகமாகக் கிடைப்பதாலேயே அமெரிக்க பழங்குடியினரால் இந்தப் பெயயர் வழங்கப்பட்டது.
இந்த பூரண சந்திரன் தரைக்கு அருகில் தோன்றும் போது அது வழக்கத்தைவிட பெரியதாகக் கண்ணுக்கு தெரியும். இது ஒரு கண் மாயை!
இந்த இரவு மற்றொரு அபூர்வமான நிகழ்வும் இருக்கும். மெர்க்குரி, வியாழன், சுக்கிரன், யுரேனஸ், நெப்டியூன், சனி ஆகியவை ஆறு கோள்கள் சந்திரனைச் சுற்றி ஒரே வரிசையில் தோன்றும்.
யுரேனஸ் மற்றும் நெப்டியூனை காண தொலைநோக்கி அல்லது இரட்டைப் பாகுபார்வைக் கண்ணாடி (binoculars) அவசியம்.
மேலும், நட்சத்திர மழை 11-12 ஓகஸ்ட் இரவில் உச்சத்தை அடையும்தான், ஆனால் அதன் செயல்பாடு இந்த இரவே தொடங்கும். எனினும், சந்திரனின் அதிக ஒளி காரணமாக மிக மங்கிய நட்சத்திரங்கள் தென்படாது.
இவ்வாறு, ஓகஸ்ட் 8-9 இரவு பூரண சந்திரன், கோள் வரிசை, மற்றும் ஆரம்பிக்கும் நட்சத்திர மழை, மூன்றையும் ஒரே நேரத்தில் காணும் அபூர்வ வாய்ப்பாக இருக்கும்.