Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

இலங்கையில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

8 ஆவணி 2025 வெள்ளி 11:51 | பார்வைகள் : 867


அரலகங்வில - தியபெதும சந்தி பகுதியில் குடும்பத் தகராறினால் பெண்ணொருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதயெல்ல வாவி பகுதியைச்  சேர்ந்த 40 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண், நேற்று இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆரம்ப விசாரணையில் இந்த கொலை நீண்டகால குடும்ப தகராறில் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பெண்ணின் கணவர் என அடையாளம் காணப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்