ரொனால்டோ, மெஸ்ஸி இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி

8 ஆவணி 2025 வெள்ளி 15:34 | பார்வைகள் : 116
2025ஆம் ஆண்டுக்கான பலோன் டி ஆர் விருதுக்கான பரிதுந்துரை பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோவின் பெயர்கள் இடம்பெறவில்லை.
கால்பந்து போட்டியின் உயரிய விருதாக கருதப்படுவது பலோன் டி'ஆர் (Ballon d'Or). இதனை 21ஆம் நூற்றாண்டில் அதிகமுறை வென்றவர்கள் இருவர்தான்.
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 8 முறையும், போர்த்துக்கலின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 5 முறையும் இவ்விருதினை கைப்பற்றியுள்ளனர்.
ரொனால்டோ கடைசியாக 2022யில் பலோன் டி'ஆர் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார். ஆனால் அது 2005ஆம் ஆண்டிற்கு பிறகு அவரது மிகக்குறைந்த இடமாகும்.
அதேபோல் மெஸ்ஸி கடைசியாக 2023ஆம் ஆண்டில் இப்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டார். இருவரும் ஒன்றாக 2021யில் கடைசியாக பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 2025க்கான விருதுப் பட்டியலில் ஜாம்பவான்களான ரொனால்டோ, மெஸ்ஸி ஆகிய இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை. இது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலில் ஜூட் பெல்லிங்கம் (Jude Bellingham), எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland), அச்ரஃப் ஹகிமி (Achraf Hakimi), ஹாரி கேன் (Harry Kane), ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (Rober Lewandowski), கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe), வினீசியஸ் ஜூனியர் (Vinicius Jr), முகமது சாலா (Mohamed Salah), லவுடரோ மார்டினஸ் (Lautaro Martinez), லமினே யாமல் (Lamine Yamal) ஆகிய முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
2007ஆம் ஆண்டு பலோன் டி'ஆர் பட்டியலில் முதல் முறையாக ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஒன்றாக தோன்றினர்.
அப்போது ரொனால்டோ 2வது இடத்தையும், மெஸ்ஸி 3வது இடத்தையும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025