வார இறுதியை தாக்கும் வெப்பம்!!

8 ஆவணி 2025 வெள்ளி 15:38 | பார்வைகள் : 1456
இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் தென் பகுதிகளை வெப்பம் தாக்கியிருந்த நிலையில், நாளை சனிக்கிழமை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் இந்த வெப்ப அலை தொடர உள்ளது.
நாளை 17 மாவட்டங்களுக்கு வெப்பம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Rhône, Tarn-et-Garonne, Tarn, Haute-Garonne, Hautes-Pyrénées, Aveyron, Lot, Loire, Isère, Drôme மற்றும் Ardèche ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 39°C வரை வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டு, அவற்றுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பம் வரலாற்றில் பதிவாகும் ஒரு குறிப்பிடத்தக்க வெப்ப அலை (vague de chaleur) என குறிப்பிடப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகும் 51 ஆவது வெப்ப அலை இதுவாகும்.
பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் 22°C முதல் 29°C வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.