Paristamil Navigation Paristamil advert login

காசாவை குறிவைப்பது ஏன்? இஸ்ரேலுக்கான ராணுவ தளவாட ஏற்றுமதிக்கு தடை- ஜேர்மனி அதிரடி

காசாவை குறிவைப்பது ஏன்? இஸ்ரேலுக்கான ராணுவ தளவாட ஏற்றுமதிக்கு தடை- ஜேர்மனி அதிரடி

8 ஆவணி 2025 வெள்ளி 16:34 | பார்வைகள் : 220


இஸ்ரேலுக்கான ராணுவ தளவாட ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

 

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடையும் நிலையில், காசாவில் இஸ்ரேல் பயன்படுத்தும் எந்தவொரு ராணுவ உபகரணங்களுக்கான ஏற்றுமதியை அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஜேர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

 

காசா நகரை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு அவரது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, இஸ்ரேலின் மிகவும் நெருங்கிய நட்பு நாடான ஜேர்மனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 

சில ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக கடினமான முடிவை அறிவித்த போது, ஜேர்மன் சற்று பின்தங்கி இருந்தது. ஆனால் தற்போது இந்த முடிவை ஜேர்மனியும் கையில் எடுத்துள்ளது.

 

இது தொடர்பாக ஜேர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு, அதே சமயம் பிணைக் கைதிகளை விடுவிப்பது, போரை சரியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவை ஜேர்மனியின் முன்னுரிமைகள் ஆகும்.

 

அதே சமயம், ஹமாஸின் கையில் காசாவில் எதிர்காலம் அமைந்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

இருப்பினும் காசாவில் இன்னும் தீவிரமான ராணுவ நடவடிக்கைகளுக்கான இஸ்ரேலிய அமைச்சரவையின் ஒப்புதல், மேல் குறிப்பிட்ட இலக்குகளை எவ்வாறு அடைய உதவும் என்பதை பார்க்க ஜேர்மனிக்கு கடினமாக இருப்பதாக மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்