Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான், இஸ்ரேலை தொடர்ந்து ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் ஆசிய நாடு

பாகிஸ்தான், இஸ்ரேலை தொடர்ந்து ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் ஆசிய நாடு

8 ஆவணி 2025 வெள்ளி 19:09 | பார்வைகள் : 253


பாகிஸ்தான், இஸ்ரேலை தொடர்ந்து ஆசிய நாடொன்று ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு, 2025-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் வழங்க கம்போடியா பரிந்துரைத்துள்ளது.

 

இதுகுறித்து கம்போடியா பிரதமர் ஹுன் மனெட் (Hun Manet) நோர்வே நோபல் கமிட்டிக்கு எழுதிய கடிதத்தில், "உலக அமைதியை மேம்படுத்துவதில் ட்ரம்பின் வரலாற்று பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்" அவரை பரிந்துரைக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

கடந்த மாதம் கம்போடியா-தாய்லாந்து இடையே ஏற்பட்ட எல்லை மோதல்களில் 43 பேர் உயிரிழந்தனர், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.

 

இந்த மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் ஜூலை 26-ஆம் திகதி இரு நாடுகளின் தலைவர்களிடமும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அதனைத் தொடர்ந்து, ஜூலை 28-ஆம் திகதி மலேசியாவில் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் சீன தூதுவர்கள் இந்த அமைதி ஒப்பந்த முயற்சியில் பங்குபெற்றனர்.

 

இதனிடையே, கம்போடியா மீது அமெரிக்கா விதித்த 49 சதவீத வரியை ட்ரம்ப் 19 சதவீதமாக குறைத்துள்ளார். இது கம்போடியாவின் துணி உற்பத்தி துறைக்கு நன்மை அளித்து, பொருளாதார நெருக்கடியை தவிர்க்க உதவியதாக கூறப்படுகிறது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்