தொடருந்துள் சிக்குண்டு இருவர் பலி! - போக்குவரத்து பாதிப்பு!!

8 ஆவணி 2025 வெள்ளி 20:33 | பார்வைகள் : 757
இரண்டு வெவ்வேறு தொடருந்து விபத்துக்களில் சிக்குண்டு இருவர் பலியாகியுள்ளனர். போகுவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
இரண்டு விபத்துக்களும் ஓகஸ்ட் 8, இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் இச்சம்பவம் Lyon நகரில் இடம்பெற்றுள்ளன. Givors தொடக்கம் Lyon Perrache வரையும் Lyon தொடக்கம் Bourg-en-Bresse வரையும் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விபத்தை அடுத்து TGV சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மாலை 6 மணியின் பின்னர் சேவைகள் படிபடியாக வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்களில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர். அவர்களது விபரங்கள் பதிவாகவில்லை.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025