Paristamil Navigation Paristamil advert login

தாய்ப்பால் ஐஸ்கிரீம் புதிதாக விற்பனை...

தாய்ப்பால் ஐஸ்கிரீம் புதிதாக விற்பனை...

9 ஆவணி 2025 சனி 08:34 | பார்வைகள் : 316


தாய்ப்பால் ஐஸ்கிரீம் புதிதாக விற்பனைக்கு வரும் நிலையில் அதன் விலை மற்றும் யார் தயாரிக்கிறார்கள், எங்கு தயாரிக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

ஐஸ்கிரீம் என்றாலே பலருக்கும் பிடித்த உணவு தான். இது பல்வேறு சுவைகளில் கிடைப்பதால் தங்களுக்கு பிடித்தமான சுவையில் ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிடுகின்றனர்.

ஆனால், தாய்ப்பால் போன்ற புதிய சுவையில் ஐஸ்கிரீம் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா, ஆம், அமெரிக்காவில் இந்த சுவையில் ஐஸ்கிரீம் கிடைக்கிறது.

பெற்றோர் தயாரிப்பு நிறுவனமான ஃப்ரிடா மற்றும் ஆட்ஃபெல்லோஸ் (Oddfellows) நிறுவனம் இணைந்து இதனை தயாரிக்கிறது.

இந்நிறுவனமாது குறைந்த எண்ணிக்கையிலான தாய்ப்பால் சுவை கொண்ட ஐஸ்கிரீம் பைண்டுகளை வெளியிடவுள்ளது.

ஃப்ரிடா நிறுவனாமது தாய்ப்பாலால் ஈர்க்கப்பட்ட ஒரு சுவையை உருவாக்க, நியூயார்க்கை தளமாகக் கொண்டு இயங்கி வரும் Oddfellows நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீம், ஆகஸ்ட் 5 முதல் 10 வரை நியூயார்க் நகரில் உள்ள Oddfellows' Dumbo கடையில் கிடைக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.

இந்த நிறுவனங்களானது தாய்ப்பால் ஐஸ்கிரீமை உண்மையான தாய்ப்பாலில் இருந்து தயாரிக்கவில்லை.

அதன் சுவைக்காக பால், கனமான கிரீம், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், சர்க்கரை, டெக்ஸ்ட்ரோஸ், முட்டையின் மஞ்சள் கருக்கள், குவார் கம், உப்பு சேர்க்கப்பட்ட கேரமல் சுவையூட்டும் பொருள், தேன் சிரப், லிப்போசோமால் போவின் கொலஸ்ட்ரம், மஞ்சள் உணவு நிறம், 0.1% புரோபில்பராபென் (பாதுகாப்பானது) மற்றும் FD&C ரெட் 40 ஆகிய பொருட்களை சேர்க்கின்றனர்.

ஃப்ரிடாவின் அறிக்கையின்படி, தாய்ப்பால் ஐஸ்கிரீமின் ஒரு பைண்ட் 12.99 அமெரிக்க டொலராகும். ஓன்லைனில் ஆர்டர் செய்யும் போது வாடிக்கையாளர்கள் இரண்டு பைண்ட்களை வாங்க வேண்டும்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்