Paristamil Navigation Paristamil advert login

புடின் - ட்ரம்ப் சந்திப்பு... உக்ரைனுக்கு பேரிழப்பு உறுதி

புடின் - ட்ரம்ப் சந்திப்பு... உக்ரைனுக்கு பேரிழப்பு உறுதி

9 ஆவணி 2025 சனி 08:34 | பார்வைகள் : 355


ரஷ்யாவும் அமெரிக்காவும் செய்து கொள்ளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

விளாடிமிர் புடினின் சட்டவிரோத நில அபகரிப்பைப் பாதுகாக்கும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதை வெள்ளை மாளிகையும் ரஷ்யாவும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதியும் கலந்து கொள்ளவுள்ள உச்சிமாநாட்டில் இந்த விவரங்கள் ஒப்புக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் முன்மொழியப்பட்ட அமெரிக்க-ரஷ்ய கூட்டு முயற்சிகளை இந்தத் திட்டங்கள் எதிரொலிப்பதாகவே கூறப்படுகிறது.

இரு தலைவர்களின் சந்திப்பு 2022 படையெடுப்பிலிருந்து புடினின் படைகளால் கைப்பற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளின் மீதான ரஷ்யாவின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.

இதன் பொருட்டே, உக்ரைன் ஜனாதிபதிக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதும், ஜெலென்ஸ்கி இல்லை என்றாலும் திட்டமிட்டப்படி சந்திப்பு நடக்கும் என ட்ரம்ப் வட்டாரங்கள் கூறுவதன் பின்னணியை ப்ளூம்பெர்க் செய்தி ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை பணியவைக்க, ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா மீது கடும் வரி விதித்தது. இரு தலைவர்களின் சந்திப்பில் உக்ரைனுக்கு சாதகமான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க ட்ரம்ப் முயற்சி செய்வார் என்றே பலர் நம்புகின்றனர்.

மேலும், ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததிலிருந்து உக்ரைனின் மிகப்பெரிய பயம் என்பது ட்ரம்புக்கும் புடினுக்கும் இடையிலான ஒரு சுமுகமான ஒப்பந்தம் ஆகும். ஆனால், உக்ரைன் தனக்கு சாதகமற்ற ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

இந்த விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நேச நாடுகளின் ஒப்புதலைப் பெற அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கிழக்கு உக்ரைனில் உள்ள மாகாணங்களின் முழுமையான கட்டுப்பாட்டை ரஷ்யா பெறும் என்றால் உக்ரைன் ஆதரவு ஐரோப்பிய நாடுகள் அதை ஏற்பது கடினம் என்றே கூறுகின்றனர்.

புடின் தற்போது கைப்பற்றியுள்ள பகுதிகள் இனி ஒருபோதும் தங்களால் மீட்க முடியாது என்பதை உக்ரைன் புரிந்து வைத்திருப்பதாகவும், ஆனால் மேலும் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுப்பது என்பது பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வாக இருக்காது என்றே கூறுகின்றனர்.

 

 

 

 

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்