வெளிநாட்டவர்களிற்குச் சிறை - புரூனோ ரத்தையோ!அறிவிப்பு

9 ஆவணி 2025 சனி 11:07 | பார்வைகள் : 513
அரசியலமைப்பு ஆலோசனை மன்றம் (Conseil d’État) சமீபத்தில் தடுத்த ஒரு நடவடிக்கையை மீண்டும் கொண்டு வரப் போவதாக உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ தெரிவித்தார். அவர், பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியதாகவும், ஆபத்தானவர்களாக சந்தேகிக்கப்படுவதாகவும் கருதப்படும் வெளிநாட்டினரின் நிர்வாகக் காவல் மையங்களில் (CRA) தடுத்து வைக்கும் காலத்தை நீட்டும் புதிய சட்ட உரையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
முந்தைய திட்டம், குறிப்பிட்ட சில ஆபத்தான வெளிநாட்டினரின் தடுத்து வைக்கும் காலத்தை 90 நாட்களிலிருந்து 210 நாட்கள் (மூன்று மாதத்திலிருந்து ஏழு மாதங்கள்) ஆக நீட்டும் வகையில் இருந்தது. ஆனால், அரசியலமைப்பு ஆலோசனை மன்றம் இந்த நீட்டிப்பு, சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நியாயமான அளவுக்கு ஒப்பாகவில்லை
சில குற்றங்கள் மிகவும் தீவிரமற்றவையாக இருந்தபோதிலும், அவற்றுக்கு கூட இந்த கடுமையான நடவடிக்கை பொருந்தும் என விதிக்கப்பட்டிருந்தது எனக் கூறி அதனை நிராகரித்தது.
மேலும், “தனிநபர் சுதந்திரத்தை அவசியமற்ற கடுமையான சட்டத்தால் குறைக்கக்கூடாது” எனவும், சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விதிகள் மிகுந்த தீவிரத்துடன் தொடர்பில்லாத குற்றங்களுக்கும் பொருந்தும் எனவும் மன்றம் சுட்டிக்காட்டியது.
“இந்த முடிவை மிகுந்த கவலையுடன் எடுத்துக்கொண்டேன். இதற்கு மிகுந்த முக்கியத்துவத்துடனும் கோபத்துடனும் பதிலளிக்கிறேன்” என புரூனோ ரத்தையோ தெரிவித்தார்.
புதிய சட்ட உரையை உருவாக்கும் முன் சசட்டம் இயற்றும் மன்றத்தின் ஆலோசனையையும் பெறுவதாக கூறினார்.
மேலும், பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் போன்ற முக்கியமான விடயங்களில் இறுதியாக தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான், எனவே “தேவையான சமயத்தில் மக்களவை வாக்கெடுப்பு (Référendum) நடத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
பின்னணி
இந்த நடவடிக்கையை ரத்தையோ 2024 செப்டம்பரில் உள்துறை அமைச்சராக வந்ததும் முன்மொழிந்தார். அதற்கு காரணம், பரிசில் 2024 செப்டம்பரில் நடந்த மாணவி கொலைச் சம்பவம்.
அந்த வழக்கின் சந்தேக நபர் — ஒரு மொரோக்கோ நாட்டவர், பிரான்சை விட்டு வெளியேற உத்தரவு (OQTF) பெற்றிருந்தும், பல ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் தடுத்து வைக்கும் மையத்தில் இருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1