Paristamil Navigation Paristamil advert login

Montreuil : அகதி ஒருவரை சுத்தியலால் தாக்கி கொன்ற நபர்..!!

Montreuil : அகதி ஒருவரை சுத்தியலால் தாக்கி கொன்ற நபர்..!!

9 ஆவணி 2025 சனி 12:04 | பார்வைகள் : 2901


 

நேற்று ஓகஸ்ட் 8,  வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் Montreuil நகர காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த நபர் அகதி ஒருவரை சுத்தியலால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்து, காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் Montreuil (Seine-Saint-Denis) நகரில் உள்ள அகதிகள் தங்கியிருந்த இடம் ஒன்றுக்கு விரைந்து சென்றனர்.

அங்குள்ள வீடொன்றில் அகதி ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சடலம் மீட்கப்பட்டது.

சரணடைந்த நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருத்ந்தது. முன்னதாக குறித்த நபர் வீதி ஒன்றில் 'மினியேச்சர்' பொருட்கள் விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்