IBAN மற்றும் தனிப்பட்ட தகவல் கசியும் போது உங்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது?

9 ஆவணி 2025 சனி 14:40 | பார்வைகள் : 988
Bouygues Telecom, Air France, Orange போன்ற நிறுவனங்களில் ஏற்பட்ட சைபர் தாக்குதல்களால், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் IBAN எண்கள் கசியக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, வாடிக்கையாளர்கள் மீது மோசடி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
IBAN மட்டும் போதுமானது அல்ல என்றாலும், மற்ற தகவல்களும் கையிலிருந்தால் ஹேக்கர்கள் உங்கள் அடையாளத்தைப் போலி செய்து, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடிக்கக்கூடிய (direct debit) சாத்தியம் இருக்கிறது.
இதனைத் தவிர்க்க, வங்கிக் கணக்கில் பாதுகாப்பான பட்டியலை (whitelist) உருவாக்குவது முக்கியம். இதில், நம்பத்தகுந்த நபர்களுக்கே பணம் அனுப்ப அனுமதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை மட்டுமமே சேர்க்க முடியும். இந்த பட்டியலை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.
வாடிக்கையாளர் தனது வங்கி ஆலோசகரைத் தொடர்பு கொண்டு இந்த பட்டியலை உருவாக்கலாம். எல்லா வங்கிகளும் இந்த அம்சத்தை வழங்க வேண்டும் என்றாலும், சில வங்கிகள் இதைப் பற்றிய தகவலை வெளிப்படையாக வழங்கவில்லை அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1