நியூசிலாந்திற்கு வந்த ஜப்பானிய போர் கப்பல்! இந்தோ-பசிபிக்கில் வலுப்பெறும் உறவுகள்!

9 ஆவணி 2025 சனி 16:38 | பார்வைகள் : 323
1936-ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்திற்கு ஜப்பானிய போர் கப்பல்கள் வருகை தந்துள்ளது.
தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் உறவை வலுப்படுத்தும் நோக்கில் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தின் தலைநகருக்கு ஜப்பானிய போர் கப்பல்கள் வருகை தந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெலிங்டன் துறைமுகத்துக்கு வந்த JS Ise மற்றும் JS Suzunami இரு ஜப்பானிய போர் கப்பல்களுக்கு நியூசிலாந்தின் HMNZS Canterbury கடற்படை கப்பல் உற்சாக வரவேற்பு வழங்கியது.
இந்த ஜப்பானிய போர் கப்பல்கள் சிட்னியில் நடைபெற்ற போர் பயிற்சிக்கு பிறகு நியூசிலாந்தை வந்தடைந்துள்ளன.
இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவை மேம்படுத்துவது இந்த வருகையின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வெலிங்டனில் உள்ள ஜப்பானிய தூதர் மகோடோ ஒசாவா வெளியிட்ட தகவலில், ஜப்பான் பாதுகாப்பு படை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமின்றி தற்போது பல பசிபிக் நாடுகளுடன் இராணுவ உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதன் முக்கிய நோக்கம் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகும் என தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வாக, சமீபத்தில் அவுஸ்திரேலியா தங்களின் புதிய போர் கப்பலை கட்டமைப்பதற்கான ராணுவ ஒப்பந்தத்தை பிரபல ஜப்பானிய நிறுவனமான மிட்சுபிஷி-க்கு வழங்கியுள்ளது.
அதே போல, நியூசிலாந்தும் ஆசிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது, இதன் ஒரு பகுதியாக தனது வெளியுறவு கொள்கைகளில் மாற்றங்களையும் செய்து வருகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1