Paristamil Navigation Paristamil advert login

நீங்கள் விரும்பி உண்ணும் பிரட் உயிரைப் பறிக்குமா?

நீங்கள் விரும்பி உண்ணும் பிரட் உயிரைப் பறிக்குமா?

29 ஆடி 2021 வியாழன் 12:54 | பார்வைகள் : 8835


மாவையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைந்து பேக்கிங் (baking) செய்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள் தான் பிரட். இன்று அதிகமானவர்களின் வீடுகளில் இது ஒரு உணவு பழக்கமாக கூட மாறிவிட்டது இது உலகப் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்றாகும்.

 
பொதுவாக பிரட் வெளிநாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உணவு வகை என்ற போதிலும், நமது அன்றாட உணவுப் பழக்கத்தில் இதுவும் ஒன்றாகியுள்ளது.நவீன உலகில் கண்டுப்பிடித்த உணவான பிரட் அதிகம் சாப்பிட கூடாது.
 
தினமும் பிரட் சாப்பிட்டு வயிற்றை நிரப்பி, உடல் ஆரோக்கியத்தை இ ழ ந் து விடாதீர்கள்.நமது உணவுப் பழக்கத்திலிருந்து இதை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமாகாது. எனினும் நாம் தினம் சாப்பிடும் பிரட்டின் அளவை க ண் டி ப்பாக குறைக்க வேண்டும். ஏனெனில் இதனால் பல திமைகளை பெறக்கூடும். இப்போது அந்த திமைகள் என்னவென்று பார்ப்போம்.
 
பிரட்டில் ஊட்டச்சத்து கிடையாது – பிரட்டை எந்த வகையில் தயார் செய்து சாப்பிட்டாலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது.இதில் புரதங்கள், வைட்டமின்கள் ஒரு நூல் அளவு கூட கிடைப்பதில்லை. வேண்டுமெனில் கோதுமை பிரட், முழுதானிய பிரட் போன்றவற்றில் சிறிதளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.
 
அதிகளவில் சோடியம் நிறைந்தது – பிரட்டில் அதிகளவில் சோடியம் இருப்பதால், இ ர த் த அ ழு த் த ம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதிலும் பிரட்டை தினசரி காலை உணவாக சாப்பிடும் ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
 
குறிப்பாக பிரட்டை கொண்டு சாண்ட்விச், பர்கர் அல்லது ஹாட் டாக் போன்றவைகளை செய்து சாப்பிடுவதன் மூலம், பல்வேறுபட்ட இதய நோ ய்கள் வரும் ஆ ப த் து அ தி க ரி க்கும்.
 
உடல் எடை அதிகரிக்கும் – பிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.
 
பசி அடங்காது – ஒயிட் பிரட் சாப்பிடுவதா? ப்ரவுன் பிரட் சாப்பிடுவதா? என்று பார்க்கும் போது, ஒயிட் பிரட் சுவையாக இருப்பதால், அதிகமானோர் ஒயிட் பிரட்டையே விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதை எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது.
 
ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதாலும், ஏனைய ஊட்டச்சத்துகள் இல்லாத காரணத்தினாலும் பசி அடங்குவதில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்