பள்ளிபாளையம் நாட்டுக்கோழி வறுவல்

9 ஆவணி 2025 சனி 17:32 | பார்வைகள் : 116
தனித்துவமான சுவை கொண்ட பள்ளிபாளையம் நாட்டுக்கோழி வறுவல் கிராமத்து ஸ்டைலில் சமைப்பது எப்படி என்று பார்ப்போம்..
கோழிக்கறி வறுவலுக்கு தேவையானவை: ஒரு கிலோ நாட்டுக்கோழி கறி, சின்ன வெங்காயம் , இஞ்சி, பூண்டு, 15 கிராம் வர மிளகாய் இவை அனைத்தும் பள்ளிபாளையம் கோழிக்கறி வருவல் சமைப்பதற்கு தேவையான பொருட்கள்.
கோழிக்கறி வறுவல் செய்முறை: கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, 250 கிராம் சின்ன வெங்காயம், விதை நீக்கிய வர மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு ஒரு தேக்கரண்டி அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப கல் உப்பு மற்றும் அரைத் தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கிய பிறகு, நறுக்கி வைத்த ஒரு கிலோ நாட்டுக் கோழிக்கறியை நன்றாக கழுவிய பின் சேர்க்க வேண்டும். வதக்கிய சின்ன வெங்காயத்துடன் கறியை நன்றாக வேக விட வேண்டும். கோழி கறி நன்றாக வெந்தவுடன் கால் மூடி தேங்காய் சேர்த்துவிட்டு, கொத்தமல்லி கொத்தமல்லி தழையை தூவி விடவும். பின்னர் சூடான சுவையான பள்ளிபாளையம் கோழிக்கறி வறுவல் தயார்..
ஒவ்வொரு ஊர்களின் உணவும் தனித்துவமான சுவையுடன் கூடியது. அது போல தான் பள்ளிபாளையம் நாட்டுக்கோழி வறுவலும், அதனுடன் பச்சைபுளி ரசமும் சேர்ந்து சாப்பிட்டால் அந்த கமிஷேசன் வாழ்க்கை முழுக்க மறக்கவே மாட்டீங்க. ஆக சுவையான இந்த பள்ளிபாளையம் கோழிக்கறி வருவலை வீட்டிலிருந்து கிராமத்து முறைப்படி சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1