Paristamil Navigation Paristamil advert login

அல்ஜீரிய தூதரகத்தின் முன்னாள் அதிகாரிக்கு பிரான்ஸில் கைதுவாரண்ட்!

அல்ஜீரிய தூதரகத்தின் முன்னாள் அதிகாரிக்கு பிரான்ஸில் கைதுவாரண்ட்!

9 ஆவணி 2025 சனி 21:51 | பார்வைகள் : 648


ஏப்ரல் 2024-இல், அல்ஜீரிய அரசுக்கு எதிராக பேசும் யூடியூப்பர் ஒருவர் கடத்தப்பட்டு, சிறையில் வைக்கப்பட்ட சம்பவத்துக்கான விசாரணையின் கீழ், இந்த  கைது வாரண்ட் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அமீர் Boukhors என்றழைக்கப்படும் அமீர் DZ என்பவரை கடத்தி, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சிறையில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி, ஒரு விசாரணை நீதிபதி இந்த கைது வாரண்டை பிறப்பித்துள்ளார்.

முதலில் Créteil நகரில் தொடங்கிய இந்த வழக்கு விசாரணையை, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து le parquet national antiterroriste (Pnat) எடுத்துக்கொண்டு, அதை DGSI மற்றும் Brigade criminelle ஆகியவற்றிடம் ஒப்படைத்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்