கொழும்பின் ஆபத்தாள பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்

10 ஆவணி 2025 ஞாயிறு 08:39 | பார்வைகள் : 201
கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இராஜகிரிய - ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி - கொலன்னாவ, பொரளை - வனாத்த முல்ல, மொரட்டுவை - லுனாவ, முகத்துவராம் - மட்டக்குளி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் துறை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பல அரச நிறுவனங்கள் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1