சியா விதைகளா? சப்ஜா விதைகளா?- உடல் எடையை எது விரைவாக குறைக்க உதவும்?
21 ஆடி 2021 புதன் 16:27 | பார்வைகள் : 9004
உடல் எடை குறைப்பை நோக்குபவர்களுக்கு சியா மற்றும் சப்ஜா விதைகள் என இரண்டும் பிரபலமான உணவுகள். இரண்டும் மிகவும் சத்தானவை மட்டுமில்லாமல் அவற்றின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எடை குறைப்பை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. சியா மற்றும் சப்ஜா விதைகள் ஒரே மாதிரியாக தோன்றுவதால் இரண்டும் ஒன்றுதான் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் அவற்றை உற்று நோக்கும்போது உங்களால் வித்தியாசத்தை உணர முடியும்
சியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: சியா விதைகளில் கலோரிகள் குறைவாக உள்ளன மற்றும் குளூட்டன் (Gluten) இல்லாதவை. பொதுவாக சியா விதைகளை சாலட் மற்றும் ஸ்மூதியில் சேர்த்து ஊட்டச்சத்து அடர்த்தியான உணவின் பலன்களை நாம் பெறலாம். சியா விதைகளில் 6 சதவீதம் தண்ணீர், 46 சதவீதம் கார்போஹைட்ரேட், 34 சதவீதம் கொழுப்பு, 19 சதவீதம் புரதம் உள்ளது. 28 கிராம் விதைகளில் 138 கலோரிகள் உள்ளன. 100 கிராம் சியா விதைகளில் 486 கலோரிகள், 16.5 கிராம் புரதம், 42.1 கிராம் கார்ப்ஸ், 30.7 கிராம் கொழுப்பு அடங்கியுள்ளன.
சப்ஜா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: சியா மற்றும் சப்ஜா விதைகளில் ஒரே அளவு கலோரிகள் உள்ளன. சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பது சிறந்தது. அவை லேசான துளசி சுவை கொண்டவை, எனவே, நீங்கள் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்காக அனைத்து வகையான பானங்களிலும் சேர்க்கலாம். 13 கிராம் சப்ஜா விதைகளில் 60 கலோரிகள், 2 கிராம் புரதம், 7 கிராம் கார்ப்ஸ், 2.5 கிராம் கொழுப்பு, 1240 மி.கி. ஒமேகா-3 உள்ளடக்கியவை. சியா விதைகள் ஒருபோதும் கருப்பு நிறமாக இருக்காது. இது சாம்பல், பழுப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிற விதைகளின் கலவையாகும். அவை சற்று பெரியவை மற்றும் ஓவல். மறுபுறம், சப்ஜா விதைகள் ஜெட் கருப்பு, சிறிய மற்றும் வட்டமானவை.
வித்தியாசங்கள்: சியா விதைகள் ஒருபோதும் கருப்பு நிறத்தில் இருக்காது. அவை சாம்பல், பழுப்பு, வெள்ளை மற்றும் கருப்பு நிற விதைகளின் கலவையாகும். அவை சற்று பெரிதாகவும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். மறுபுறம், சப்ஜா விதைகள் ஜெட் கருப்பு, சிறியதாகவும் வட்டமாகவும் தோற்றமளிக்கும்.
உடல் எடை குறைப்புக்கு எது சிறந்தது? சியா மற்றும் சப்ஜா விதைகளின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் என்பது ஏறக்குறைய சரிசமமாக உள்ளது. சப்ஜா மற்றும் சியா விதைகள் இரண்டும் சத்தானவை மற்றும் ஆரோக்கியமானவை. அவை மனநிறைவை அதிகரிப்பதோடு ஆரோக்கியமற்ற உணவுகளில் ஈடுபடுவதையும் தடுக்கின்றன. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது சியா விதைகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் நிறைய உள்ளன. ஆனால், சப்ஜா விதைகள் குறித்த குறைவாக ஆய்வுகளே உள்ளன.
சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் இரண்டையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும், உடல் எடை குறைப்பு என்பது ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் உடற்பயிற்சி செய்வதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விதைகளை எடுத்துக்கொள்வது மட்டுமே உங்களுக்கு பெரிதாக உதவாது.