அவுஸ்திரேலியா தொடருடன் ரோஹித் சர்மா விராட் கோலி ஓய்வா? - கண்டிப்பு காட்டும் பிசிசிஐ

10 ஆவணி 2025 ஞாயிறு 12:39 | பார்வைகள் : 427
அவுஸ்திரேலியா தொடருடன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, 2024 T20 உலக கோப்பையை வென்ற உடன் T20 போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து, சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சச்சின் - ஆண்டர்சன் கோப்பைக்கு முன்னர், இருவரும் டெஸ்ட் போட்டிகளிலும் தங்களது ஓய்வை அறிவித்தனர்.
இருவரும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஓய்வு பெறாத நிலையில், 2027 ஒரு நாள் உலககோப்பை வரை விளையாட விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால், அதற்கு முன்னதாகவே இருவரும் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி, வரும் அக்டோபர் 18 ஆம் திகதி முதல் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது.
இந்த தொடருடன் இரு வீரர்களும் ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வீரர்கள் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது.
எனவே தொடர்ந்து அணியில் விளையாட வேண்டுமானால், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள விஜய் ஹசாரே கோப்பையில் இருவரும் கட்டாயம் விளையாட வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக இங்கிலாந்து தொடருக்கு முன்னர், ரஞ்சி கோப்பைகளில் விளையாட வீரர்களை பிசிசிஐ வலியுறுத்தியது.
வளர்ந்து வரும் திறமையான இளம் வீரர்கள் மற்றும் இருவரும் 40 வயதை எட்டியுள்ள நிலையில், 2027 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1