பிரெஞ்சு கடலில் தென்பட்ட அரிதான திமிங்கிலம்!!

10 ஆவணி 2025 ஞாயிறு 11:51 | பார்வைகள் : 1531
மார்செய் நகரின் எல்லைக்குட்பட்ட பிரெஞ்சுக் கடலில் அரிதான திமிங்கிலம் ஒன்று தென்பட்டுள்ளது.
நீல திமிங்கிலத்தின் பின்னர் இந்த பூமியில் வசிக்கும் மிகப்பெரிய கடல்வாழ் உயிரினமான fin whale எனும் திமிங்கிலமே கடலின் மேற்பரப்பில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 20 மீற்றர் நீளமும், 40 தொம் எடையும் கொண்ட குறித்த திமிங்கிலம் Marseille (Bouches-du-Rhône) கடற்பகுதியில் நேற்று ஓகஸ்ட் 9 ஆம் திகதி சனிக்கிழமை காணப்பட்டது.
300 மீற்றர் இடைவெளியில் சுற்றுலாப்பயணிகள் படகொன்று திமிங்கிலத்தை சந்தித்ததாகவும், ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.