Paristamil Navigation Paristamil advert login

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் !!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் !!

20 ஆடி 2021 செவ்வாய் 12:56 | பார்வைகள் : 9166


 ஆப்பிளில் இரும்புச்சத்து பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் பாலுடன் ஒரு ஆப்பிளும் எடுத்துக் கொண்டால் ரத்தசோகை நீக்கி உடலை பாதுகாக்கும்.

 
உடலைப் பாதுகாக்கும் நான்கு பழங்களில் ஆப்பிள் முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடங்களில் திராட்சை, வாழைப்பழம், அத்திப்பழம் போன்றவை இருக்கின்றன.
 
 
தினம் இரண்டு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாக கரைத்து விடுகிறது.
 
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ரத்தத்தில் வேகமாக கலந்து அதில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
 
ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் எனும் சத்து சுவாச செல்களை வலிமை ஆக்குகிறது. இதனால் நுரையீரலுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை சீராக வைக்க முடிகிறது.
 
ஆப்பிளில் உள்ள யூரிக் அமிலம் வாதம் மற்றும் மூட்டு விக்க நோயாளிகளின் வலிகளைப் போக்குகிறது. அவித்த ஆப்பிளையும் வாத நோயாளிகள் சாப்பிட்டு வரலாம். அவித்த அப்பிளை சூட்டுடன் வலி உள்ள இடத்தில் கட்டினால் குணமடையும்.
 
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ப்ரீராடிக்கல் திரவத்தை கட்டு படுத்தும் சத்தான வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றன மேலும் புற்று நோயை உருவாக்கும் வாய்ப்பினை தடுக்கிறது.
 
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கண்புரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்