Paristamil Navigation Paristamil advert login

ட்ரம்ப்-புடின் சந்திப்பு பிரான்சில் உள்ள உக்ரைனிய இடம்பெயர்ந்தோருக்கு நிம்மதியளிக்கவில்லை!!

ட்ரம்ப்-புடின் சந்திப்பு பிரான்சில் உள்ள உக்ரைனிய இடம்பெயர்ந்தோருக்கு நிம்மதியளிக்கவில்லை!!

10 ஆவணி 2025 ஞாயிறு 14:57 | பார்வைகள் : 1699


டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விலாதிமிர் புடின் இடையே ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ள சந்திப்பு, பிரான்சில் உள்ள உக்ரைனிய இடம்பெயர்ந்த மக்களுக்கு கடுமையான கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சந்திப்பு, ரஷ்யாவின் உக்ரைனிய ஆக்கிரமிப்புக்கு ஒரு தீர்வாக அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியாக ட்ரம்பால் விளக்கப்படுகிறது இருப்பினும், இந்த அமைதி நிலப்பகுதி தியாகங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடும் என்பதாலேயே, உக்ரைனியர்கள் அதனை வலுவாக நிராகரிக்கின்றனர். 

உக்ரைனிய அதிபர் செலென்ஸ்கியும், இந்த சந்திப்பில் உக்ரைனியாவின் பங்கு இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவும் அமைதிக்கெதிரானது எனக் கூறியுள்ளார்.

உலகெங்கும் உள்ள உக்ரைனியர்கள், குறிப்பாக பிரான்சில் உள்ளவர்கள், தெரிவித்ததாவது "புடினுடன் பேசுவதில் நம்பிக்கை இல்லை. பொருளாதார தண்டனைகள் வேலை செய்யவில்லை. ரஷ்யா மற்றும் அதன் மக்கள் எல்லா தடைகளையும் ஏற்க கற்றுக்கொண்டுவிட்டனர். எண்ணெய் இன்னும் வெற்றிகரமாக விற்பனையாகிறது." மேலும் அமைதி என்பது வலிமையைக் கொண்டு மட்டுமே ஏற்படக்கூடியது. 

மேலும் டொன்பாஸ் (le Donbass) மற்றும் கிரிமியாவைப் (la Crimée) பரிசாகக் கொடுத்துவிட்டால் போர் முடியும் என்பது ஒரு மாயை. ரஷ்யா அமைதியை விரும்பவில்லை; போரைத் தொடரவே விரும்புகிறது என்பதே உண்மை. அதனால், உரையாடலோடு ரஷ்யாவிற்கு கடுமையான தண்டனைகளும், உக்ரைனின் பாதுகாப்புக்கு ஆயுதங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதை புலம்பெயர் உக்ரைனியர்கள் வலியுறுத்துகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்