குளிர்சாதன லொரியில் சிக்கிய 15 அகதிகள் மீட்பு: நான்கு பேர் மருத்துவமனையில்!!
10 ஆவணி 2025 ஞாயிறு 16:36 | பார்வைகள் : 2042
பா-து-கலே (Pas-de-Calais) பகுதியில், இங்கிலாந்தை நோக்கிச் செல்லும் குளிரூட்டும் லாரியில் பயணித்த 15 எரித்ரிய அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர், உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையில் பாதிக்கப்பட்டு (Hypothermie) இருந்தனர். லாரி ஓட்டுனர் சத்தங்களை கேட்டதும் அதிகாரிகளுக்குத் தகவலளித்துள்ளார். ஒரே ஒரு பெண் உட்பட அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு சிறார்கள் என தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். அவர்கள் ஒரு அகதிகள் நல அமைப்பால் கவனிக்கப்படுகிறார்கள். சிலருக்கு பிரான்சை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடும் பாதுகாப்பு இருந்தும், இங்கிலாந்து செல்ல அகதிகள் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளைத் தொடருகின்றனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan