பிரேஸில் நாட்டில் கோர விபத்து - 11பேர் பலி

10 ஆவணி 2025 ஞாயிறு 17:41 | பார்வைகள் : 1575
பிரேசில் நாட்டின் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து நேற்று மாலை சால் பாலோ நகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 45 பயணிகள் பயணம் செய்தனர்.
தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் டயர் ஒன்று திடீரென வெடித்தது.
இதனால் அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது எதிரே வந்த லாரி மீது பஸ் வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் 38 பேர் பலியானது குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் மட்டும் சாலை விபத்து தொடர்பான சம்பவங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாரி மீது பயணிகள் பஸ் மோதியதில் 38 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.