Paristamil Navigation Paristamil advert login

அஜித்குமார் கொலை வழக்கு: மழுப்பும் நிகிதா; சி.பி.ஐ.,

அஜித்குமார் கொலை வழக்கு: மழுப்பும் நிகிதா; சி.பி.ஐ.,

11 ஆவணி 2025 திங்கள் 09:13 | பார்வைகள் : 152


கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கில், கார் சாவியை அவர் வற்புறுத்தி வாங்கியதாக திருப்புவனம் போலீசில் பேராசிரியை நிகிதா புகார் கொடுத்திருந்த நிலையில், நிகிதா தான், கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்தது, சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நிகிதா, தன்னிடம் இருந்த கார் சாவியை அஜித்குமார் வற்புறுத்தி வாங்கி, நீண்ட நேரம் கழித்து சாவியை ஒப்படைத்தார் என, திருப்புவனம் போலீசிடம் புகார் அளித்திருந்தார். ஆனால், சி.பி.ஐ., குழுவினர், 'சிசிடிவி' காட்சிகளை பரிசோதித்தபோது, கார் சாவியை அஜித்குமார் உடனே கொண்டு வந்து கொடுத்ததை கண்டறிந்துள்ளனர்.

காரில் சிறிது துாரம் சென்ற பின் தான், நகைகள் வைத்திருந்த கட்டைப்பையின் துணிகள் சிதறி கிடந்தததை கண்டு, நகையை நிகிதா தேடியுள்ளார். நகைகள் இல்லாததால், மீண்டும் நேரடியாக வந்து அஜித்குமாரிடம் கேட்ட போது, 'இல்லை' என அவர் மறுக்கவே, அறநிலையத்துறை அலுவலகத்திலும், அதன்பின் போலீஸ் ஸ்டேஷனிலும் நிகிதா புகார் அளித்துள்ளார்.

ஆனால், நிகிதா கைப்பட எழுதி கொடுத்த புகாரில், சாவியை நீண்ட நேரம் கழித்து கொடுத்தாகவும், காரில் ஏறும் போதே நகைகள் காணாமல் போனதை கண்டுபிடித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளது ஏன் என, சி.பி.ஐ., அதிகாரிகள் நிகிதாவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நிகிதா சரியாக பதில் அளிக்கவில்லை. இதற்கிடையில், நகைகள் காணாமல் போனதாக நிகிதா கூறும் குற்றச்சாட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்தும் அவரிடம் விசாரணை நடக்கிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்