Paristamil Navigation Paristamil advert login

காட்டுத் தீ பரவும் அபாயம்! - 25 மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கை!!

காட்டுத் தீ பரவும் அபாயம்! - 25 மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கை!!

11 ஆவணி 2025 திங்கள் 11:13 | பார்வைகள் : 220


 

நாட்டின் தென் பகுதிகளில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக பல மாவட்டங்களில் காட்டுத்தீ பரவும் அபாயம் எழுந்துள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. இதற்காக மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் வகைகளில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Alpes-de-Haute-Provence, Ardèche, Aude, Aveyron, Bouches-du-Rhône, Charente, Charente-Maritime, Deux-Sèvres, Dordogne, Drôme, Gard, Gers, Gironde, Haute-Garonne, Hérault, Indre, Landes, Lot, Lot-et-Garonne, Maine-et-Loire, Tarn-et-Garonne, Var, Vaucluse, Vendée மற்றும் Vienne ஆகிய மாவட்டங்ககுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை இன்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

அதை சூழ உள்ள பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்தவாரம் 48 மணிநேரத்தில் 17,000 ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்