Paristamil Navigation Paristamil advert login

ஆரோக்கியமான உடல் எடையை குறைக்க உதவுகிறதா முந்திரி...?

ஆரோக்கியமான உடல் எடையை  குறைக்க உதவுகிறதா முந்திரி...?

9 ஆடி 2021 வெள்ளி 13:01 | பார்வைகள் : 8678


 முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயாமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள்  அடங்கியுள்ளன.

 
முந்திரியில் ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டாபாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது. இதில் அதிகளவில் நார்ச்சத்து  இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது.
 
முந்திரியை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம். இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள்  உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற்செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
 
முந்திரியில் உள்ள லுடின் மற்றும் ஜேக்ஸாந்த்தின் பொருள் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் காக்கிறது. அதே நேரத்தில் கண்புரை வராமல் தடுக்கிறது.
 
1 அவுன்ஸ் பச்சை முந்திரி பருப்பில் 155 கலோரிகள் உள்ளன. எனவே இதை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது நம்மளுக்கு அதிகளவில் உடல் எடை கூட வாய்பில்லை.
 
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு போதும் உங்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்க  என்கிறார்கள்.
 
முந்திரி பருப்பை சரியான அளவில் எடுத்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையில் மாற்றம் ஏற்படாது. ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பை எடுத்தாலே போதும் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்