Paristamil Navigation Paristamil advert login

.அனைத்து மட்டங்களிலும் ஒருங்கிணைப்பு அவசியம்!

.அனைத்து மட்டங்களிலும் ஒருங்கிணைப்பு அவசியம்!

11 ஆவணி 2025 திங்கள் 13:13 | பார்வைகள் : 4467


பருவகால வெப்பக்காற்றால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை அளிக்கச் செய்வதற்காக, சுகாதார அமைச்சகம், பிராந்திய, மாவட்ட சுகாதார முகமைகள், மாவட்டஆணையங்கள் மற்றும் பிரான்சின் பல்வேறு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கிடையில் முன்கூட்டியே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

“அவசர சிகிச்சை பிரிவுகளில் அதிகபட்ச படுக்கைகளை திறந்து வைத்திருப்பதன் மூலம், அதிகமான நோயாளிகளை ஏற்கும் வகையில் சிகிச்சையை சீராக மேற்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். அதற்கு அனைத்து நேரத்திலும், அணைத்து மட்டங்களிலும் ஒருங்கிணைப்பு தேவை,” என்று சுகாதாரத்துறை அமைச்சர் யானிக் நொய்தெர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “காலப்போக்கில், எமது அரசியல் கொள்கைகள் இந்த மிக முக்கியமான காலநிலை மாற்றத்தை கருத்தில் கொள்ள வேண்டும். இது எமது சுகாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது, குறிப்பாக பருவகால வெப்பக்காற்று நேரங்களில் அது இன்னும் தெளிவாகத் தெரிகிறது” என்றும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்