காட்டுத்தீ அபாயம் - 25 மாவட்டங்கள் கடும் எச்சரிக்கையில்!

11 ஆவணி 2025 திங்கள் 14:15 | பார்வைகள் : 813
அதிஅயுச்ச வெப்ப அலை (canicule) வானிலைச் சூழ்நிலைகள் காட்டுத்தீ மற்றும் செடிகளின் தீ விபத்துகளின் தொடக்கம் மற்றும் பரவல் அபாயத்தை குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரிக்கின்றன என தேசிய வானிலை மையம் (Météo-France) எச்சரித்துள்ளது.
பிரான்சின் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை 35 முதல் 39°C வரை உயர, Rhône ஆற்றின் கீழ் பள்ளத்தாக்கிலும் தென்மேற்கு சமவெளியிலும் 40 முதல் 42°ஊ வரை உயர்கின்றது. இது கடந்த காலங்களை விட அதியுச்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்துடன் சேர்ந்து காற்றும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் அத்லோந்திக் கடற்கரையில் மணிக்கு 40–45 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கவும் வாய்ப்புள்ளது.
சிகப்பு எச்சரிக்கை நிலை வெப்ப அலையுடன் இணைந்து, பெரும்பாலும் மேற்கும் தெற்குமாக அமைந்துள்ள 25 மாவட்டங்களை தீ விபத்து உயர் அபாயத்தில் உள்ளதாக தேசிய வானிலை மையம் வகைப்படுத்தியுள்ளது.
AUDE மாவட்டத்தில், உலர்ந்த சூடான காற்றும் மற்றும் வெப்ப அலைகளும், ஞாயிற்றுக்கிழமை 16,000 ஹெக்டேர் பரப்பளவில் பரவிய பெரும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினரின் நடவடிக்கைகளை சிக்கலாக்கின. அங்குள்ள வெப்பநிலை 40 முதல் 42°ஊ வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்று திங்கட்கிழமையும் காட்டுத் தீயின் அதியுச்ச விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1