Paristamil Navigation Paristamil advert login

கணவாய் மீன் கோலா உருண்டை...

கணவாய் மீன் கோலா உருண்டை...

11 ஆவணி 2025 திங்கள் 14:28 | பார்வைகள் : 1359


மட்டன்ல கோலா சாப்பிட்டு போர் அடுச்சுருச்சா அப்போ வாங்க கணவாய் மீன்ல கோலா உருண்டை சாப்பிட்டு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;-கணவாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரிமசாலா தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, ஒரு முட்டை, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, எண்ணெய்,

செய்முறை;-கணவாயினை தோல் மற்றும் தலையினை எடுத்து சுத்தம் செய்து, சதுரம் போன்ற வடிவில் வெட்டி தனித்தனியாக எடுத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், கரிமசாலா தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, மீண்டும் மிக்ஸியில் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்க அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்து எடுத்ததையுடன் சின்ன வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையான வடிவத்தில் உருட்டி விட்டு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி வேண்டும்.

பின்பு மிதமாக சூட்டில் கோலா உருண்டையை போட்டு 5 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் மனமான சுவையில் மதிய சாப்பிட்டுக்கு ஏத்த கணவாய் கோலா தயாராகிவிடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்