ரஜினியின் ‘கூலி’.. இத்தனை கோடி வசூலா?

11 ஆவணி 2025 திங்கள் 14:28 | பார்வைகள் : 181
ரஜினியின் ‘கூலி’ படத்தின் டிக்கென் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகளை அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. விடுமுறை நாட்கள் தொடர்ந்து வர இருப்பதால் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகளும் காலியாகியுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி திரைப்படம் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் அதைத் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு படம் வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் நாளில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிமான வசூல் டிக்கெட் முன்பதிவில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது.
அமெரிக்காவில் ‘கூலி’ படத்தின் டிக்கெட்டுகள் 1.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகியுள்ளன. அந்நாட்டில் தமிழ் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங்காக பார்க்கப்படுகிறது. அண்மையில் விஜயின் ‘லியோ’ படத்தின் டிக்கெட் 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகின. இதன் மூலம் அமெரிக்காவில் கூலி புதிய சாதனையை படைத்துள்ளது.
அதேபோல, ‘கூலி’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. கடைசியாக விஜயின் ‘லியோ’ படத்தின் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ‘லியோ’ படத்தை விட கூடுதல் நாட்களுக்கான முன்பதிவை குறைந்த நேரத்திலேயே ‘கூலி’ முறியடித்துள்ளது.
இதன் மூலம் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையான ரூ.140+ கோடியை ‘கூலி’ முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், கூலி திரைப்படம் ‘A' சென்சார் சான்றிதழ் பெற்றிருப்பது வசூலை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஹ்ரித்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆரின் ‘வார் 2’ திரைப்படம் ‘கூலி’ வெளியாகும் அதே நாளில் வெளியாக இருப்பதால் வட மாநிலங்களில் பாக்ஸ்ஆஃபீஸ் வசூல் பாதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை ‘கூலி’ திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் உலக அளவில் ரூ.50+ கோடியை நெருங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1