இலங்கை ஜனாதிபதி அநுர அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பயணம்

11 ஆவணி 2025 திங்கள் 14:32 | பார்வைகள் : 142
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவிற்கும், அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் புறப்பட்டு, 24 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையில் ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வெளியுறவுக் கொள்கை உட்பட அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் பல உலகத் தலைவர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்பின்னர் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில் 28 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1