காசாவில் இஸ்ரேலின் திட்டமானது "முன்னறிவிக்கப்பட்ட பேரழிவு" என மக்ரோன் கண்டனம்!!

11 ஆவணி 2025 திங்கள் 15:04 | பார்வைகள் : 736
"இஸ்ரேல் அமைச்சரவையின் அறிவிப்பின்படி காசா நகரம் மற்றும் மவாசி முகாம்களில் தனது நடவடிக்கையை விரிவுபடுத்துவதும், இஸ்ரேல் மீண்டும் கைப்பற்றுவதும் ஒரு மிகப்பெரிய பேரழிவாகும்" என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் இஸ்ரேலிய பிணைய கைதிகள் மற்றும் காசா மக்கள் மீதும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது ஒரு முடிவில்லா போருக்கான பயங்கர முடிவாகும் என்றும் அவர் குற்றம் சாடியுள்ளார். இஸ்ரேலிய அரசு "மனிதாபிமான உதவி" வழங்குவதாக தெரிவித்தாலும், அதன் நடைமுறை குறித்து தெளிவில்லை எனவும் உடனடி நிரந்தர போர் நிறுத்தம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ஒரு ஸ்திரப்படுத்தும் பணி அமைக்கப்படும் வகையில் அவசர நடவடிக்கை தேவை என்றும் மக்ரோன் கூறியுள்ளார். அவர் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து நியூயோர்க்கில் ஹமாஸ் மற்றும் பிடியாளர்களின் விடுவிப்பு குறித்து ஒரு முக்கியமான உடன்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அந்த பணிக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1